அதிவிரைவில் 15.7 மில்லியன் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவுள்ளனர். தமது எதிர்பார்ப்புகளை வலியுறுத்தி தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வர்.
நியாயமான மற்றும் செழிப்பான எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இந்த தேர்தல் இலங்கைக்கு கிடைத்த அhpயதொரு வாய்ப்பாகும்.
இதனை அடைவதற்கு இலங்கையின் ஆறு மில்லியன் சிறுவர்களில் எந்தவொரு சிறுவரும் புறந்தள்ளப்படாது இருப்பதை நாம் உறுதி செய்தல் வேண்டும்.
இலங்கையானது பல இலட்சக்கணக்கான குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆரம்ப பாடசாலையில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் வருகை உலகளாவிய எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இருந்தபோதும் தமது திறனை வெளிப்படுத்துவதற்கு எமது உதவியை நாடி பல சிறுவா;கள் காத்திருக்கின்றனர்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிறுவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவதற்கும் சமமான சந்தர்;ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இலங்கையின் 6 மில்லியன் சிறுவர்கள் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சக்தியும் பொறுப்பும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கு உள்ளது.
சிறுவா;களை பாதிக்கும் 6 பிரதானமாக விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.
இலங்கையின் எதிர்காலத்திற்காகவும் அதன் எதிர்;கால சந்ததியினருக்காகவூம் இன்றே செயற்படுவோம்.
6 மில்லியன் சிறுவர்களுக்காக நிறைவேற்ற வேண்டிய 6 கடமைகள்
இலங்கையின் 6 மில்லியன் சிறுவர்களின் திறனை வெளிக்கொணர்வதற்காக கவனம் செலுத்தப்பட வேண்டிய 6 முக்கியமான விடயங்கள்.
சமூக அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை ஆகியவற்றுக்கான முதலீடுகளை அதிகரித்து இலங்கை சிறுவர்களின் மந்த போசாக்கு பிரச்சினையை நிவர்த்தி செய்தல்.
ஒவ்வொரு பாடசாலையும் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்தல்.
சிறுவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சிறுவர் வறுமையை ஒழித்து அவர்களின் வாழ்க்கைக்கு சரியான தொடக்கம் இருப்பதை உறுதி செய்து உலகளாவிய சிறுவர் நலன்புரி திட்டத்தை உருவாக்குதல்.
சட்ட பூர்வமாகவும் வெளிப்படையாகவும் உடல் ரீதியான தண்டனைகள் அல்லது அவமான செயல்களை தடை செய்து ஒழுக்கமுள்ள சிறுவர்களை உருவாக்க சரியான வழிமுறையை ஊக்குவித்து அமுல்படுத்தல்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் நடைமுறைப்படுத்த தேசிய ரீதியில் கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்குதல்.
காடுகள். ஈரநிலங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்கவும் மறுசீரமைக்கவும் முன்னுரிமை வழங்கி எல்லா அரச அமைச்சுகளும் எதிர்கால திட்டங்களை வகுக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை கவனத்தில் கொள்ளவும் காலநிலை மாற்றங்களுக்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்கவும் உதவி செய்தல்.
சிறுவர்களுக்கான வாக்களிக்கும் “எங்க வேலை என்னாச்சு” நிகழ்ச்சித்திட்டம்
6 மில்லியன் இலங்கை சிறுவா;கள் எதிh;நோக்கும் 6 பிரதானமான சவால்கள்.
Ara Wade: சிறுவர்களுக்கான வாக்கு கடிததத்தில் இப்போதே உங்களது பெயரை சேருங்கள்.